Idhayam Matrimony

தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது.

தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான  கிரேஸி ஹேப்பி பீட்சா இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன்  கூறியதாவது:-

தாய்லாந்தில் உள்ள பீட்சா  நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல் பிரசாரம் தான் இது.   நீங்கள் பீட்சாவுடன்  கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம். சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக  மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார்.

கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன்  கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது.  ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு  கூடுதலாக ரூ. 225  வசூலிக்கபடும்.  

அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள். தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால்  அபராதமும் சிறைவாசமும் விதிக்கப்படலாம்.  தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை  வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து