முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      ஆன்மிகம்
Thiruparankundram

மதுரை,  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை  (14-ந் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை  (ஜூலை 14ம் தேதி) அதிகாலை 5.25 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலில் கம்பீரமான 125 அடி உயரம் கொண்ட ஏழு நிலையான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை  (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 14-ந் தேதி அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14-ந் தேதி அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து