முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      சினிமா
Surya-Anal 2025-07-14

Source: provided

சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பீனிக்ஸ் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பத்திரிகையாளர் சங்கம், பீனிக்ஸ் படக்குழுவினரை கௌரவப்படுத்தினர். அப்போது சூர்யா விஜய்சேதுபதி பேசுகையில், “இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி.  இந்த படத்தை பார்த்து பலரும் பாராட்டினர்.

அனல் அரசு அவர்கள் என்னை தேர்வு செய்யவில்லை என்றால் இந்த இடத்தில் நான் இருந்திருக்க மாட்டேன். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் சாம் சி.எஸ் பக்கபலமாக இருந்தனர். அனைவருக்கும் நன்றி என்றார். இயக்குனர் அனல் அரசு பேசுகையில், இதை ஒரு சூர்யா விஜய்சேதுபதி படமாக பார்க்காமல், 28 இளைஞர்களின் வாழ்க்கையாக பாருங்கள். சூர்யா இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய கடின உழைப்பை கூடவே இருந்து பார்த்து உள்ளேன். இந்த வயதில் அதிக உழைப்பை கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து