முக்கிய செய்திகள்

கனமழை காரணமாக செங்கல்பட்டில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Chengalpattu 2021 11 28

Source: provided

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை மழை பெய்து வந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள அண்ணா நகர், சக்தி நகர், பழனி பாபா நகர், ஆண்டாள் நகர் உள்ளிட்ட இடங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை, நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனைக் கண்ட வாகன உரிமையாளர்கள் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு சில வாகனங்களை, மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு சில பகுதிகளில் மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில், அதிகாரிகளும் அப்பகுதியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து