முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
DCM-1-2025-07-10

சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (10.7.2025) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 39 திட்டப்பணிகளை திறந்து வைத்து,ரூ. 89.22 கோடி மதிப்பீட்டில் 141 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,099 பயனாளிகளுக்கு ரூ.40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ரூ. 40.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.11.57 கோடி  மதிப்பீட்டில் 39 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு துணை முதல்வர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ரூ.89.22 கோடி மதிப்பீட்டில் 141 பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வி.எஸ்.மாதேஸ்வரன், கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து