எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரேசிலியா : லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரான் கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆப்பரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன. இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்நிலையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலிலும் இரண்டு நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் என்றும் பிரேசில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


