முக்கிய செய்திகள்

இன்னும் 8 விக்கெட்கள் மட்டுமே: ஹாட்லீயின் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின் ?

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      விளையாட்டு
Sports-5

Source: provided

மும்பை: மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின், நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடிக்கவாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹர்பஜன் சிங்கின்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் சமீபத்தில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை அஸ்வின் முறியடித்தார். அடுத்ததாக மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கவிருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் ஹேட்லியின் சாதனையையும் முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

8 விக்கெட்கள்...

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹேட்லியின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 8 விக்கெட்டுகள்தான் தேவை. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினால் ரிச்சர்ட் ஹாட்லீயின் சாதனையை முறியடிப்பார்.

பிஷன்சிங் பேடி... 

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி 12 டெஸ்ட்களில் 57 விக்கெட்டுகளையும், எர்ரபள்ளி பிரசன்னா 10 டெஸ்ட்களில் 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக டிம் சவுதி 10 டெஸ்ட் களில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து