முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

58 ஆண்டுக்கு முன்பே ஒமைக்ரான் பெயரில் இத்தாலி சினிமா வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்கள்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பெயரில் 1963-ம் ஆண்டே திரைப்படம் வெளியானதாக சினிமா போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

உலகை கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தற்போது ஒமைக்ரான் வைரசாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்த துவங்கியுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் குறித்து கடந்த 1963-ம் ஆண்டே தி ஒமைக்ரான் வேரியன்ட் என்ற பெயரில் வெளிநாட்டில் திரைப்படம் வெளியானதாக ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், அந்த படத்தின் போஸ்டராக சொல்லப்படும் புகைப்படத்தில், பூமி கல்லறையாக மாறிய நாள் என்னும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.  இதனை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் பகிர்ந்துள்ளார்.

உண்மையில் தி ஒமைக்ரான் வேரியன்ட் என்னும் திரைப்படம் வெளியானதா என ஆராய்ந்ததில், அந்த போஸ்டர் சித்தரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, SUCESOS EN LA IV FASE (பேஸ் 4) என்ற பெயரில் 1974-ல் வெளியான படத்தின் போஸ்டரை மாற்றி ஒமைக்ரான் பெயரில் சிலர் பரவவிட்டுள்ளனர். இது தெரியாமல், பலரும் உண்மை என நம்பி அப்போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

அதேநேரத்தில், அதே 1963-ம் ஆண்டு ஒமைக்ரான் என்ற பெயரில் இத்தாலிய படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. காமெடி, சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், வேற்று கிரகவாசி பூமியில் வசிக்கும் ஒருவரை அழைத்து செல்வது போன்று கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரும் திடீரென வைரலானது. ஆனால், இந்த ஒமைக்ரான் திரைப்படத்தில் வைரஸ், தொற்றுநோய் குறித்து எந்த காட்சிகளும் அமைக்கப்படவில்லை. இருந்தாலும், ஒமைக்ரான் பெயரில் வெளியான படப்போஸ்டர் பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து