முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் குரல் போல் பேசி மிமிக்கிரி செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : செல்லூர் கே.ராஜூ அறிக்கை

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : எனது குரல் போல் பேசி தொலைபேசியில் மிமிக்கிரி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது, 

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின்  அருளாசியுடன் அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்லும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இவ்வியக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகின்றனர்.  அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் இன்னொரு நபருடன் நான் அலைபேசியில் பேசுவது போல் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக என்னுடைய குரல் போன்று மிமிக்கிரி செய்து பேசியுள்ளனர் .நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் எனது அலைபேசியை பயன்படுத்துவதில்லை. ஆனால் அந்த ஆடியோ இரவு 1:30 மணிக்கு மேல் நான் பேசியது போல் வெளியாகியுள்ளது .அதில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்ட தாகும். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலரின் நயவஞ்சக முயற்சியாக இது உள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான் நான் பேசாத கருத்துக்கள் என் குரல் போன்று பேசி பதிவு செய்து பரப்பி வருகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலாவை  சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.

ஆனால் இப்போது கழகத்தில் இரு ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் அ.தி.மு.க.வின் தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத் தேவையில்லை. தற்போது அந்த சூழ்நிலையும் எழவில்லை என்பது எனது கருத்தாகும் .எனவே என் குரலில் மிமிக்ரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விஷமிகள் மீது கட்சியின் தலைமையிடம் உரிய அனுமதி பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து