முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் பயங்கர கார் விபத்து: கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் பலியான சோகம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கோழிக்கோடு : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று வயதே ஆன குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பேய்ப்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட முகமது ஜாபிர்(48), அவருடைய மனைவி ஷப்னா(36) மற்றும் மூன்று குழந்தைகளும் சவுதி அரேபியாவின் ஜுபைல் நகரில் வசித்து வருகின்றனர். ஜாபிர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஜிஸான் நகருக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது.

இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் தற்போது வசித்து வரும்  ஜுபைல் நகரில் இருந்து ஜிஸான் நகருக்கு குடிபெயர்வதற்காக வீட்டின் சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு பின் அவர் தனது குடும்பத்தினருடன் காரில் பயணித்துள்ளார்.  நேற்று முன்தினம் அதிகாலை, அவர்கள் அனைவரும் காரில் பயணித்து கொண்டிருந்தனர். பொருட்களை ஏற்றி சென்ற வண்டியும் சில உறவினர்களும்  ஜிஸான் நகருக்கு சென்று அடைந்து விட்டனர். ஆனால் ஜாபிர் குடும்பத்தினர் அங்கு வந்து சேரவில்லை. அதன் பின்னர் தான் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது.

ரியாத் நகரத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.பிஷா மாகாணத்தில் அவர்களுடைய கார் சென்று கொண்டிருக்கும் போது  பின்னால் வந்த வேகமான கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அசுர வேகத்தில் இவர்கள் கார் மீது மோதியது. அதில் நிலை தடுமாறிய இவர்களுடைய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.  

விபத்தில் ஜாபிர்(48 வயது), அவருடைய மனைவி ஷப்னா(36 வயது), மூன்று வயதே ஆன குழந்தை லுத்பி மற்றும் குழந்தைகள் சஹா(5 வயது) மற்றும் லைபா(7 வயது) உள்பட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  அவர்களுடைய உடல் அ-ரெயின் மருத்துவமனையில் இருக்கும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் பேய்ப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறும் போது, 

இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த விபத்து அனைவரையும் கவலையில் மூழ்கச் செய்துள்ளது. இறந்தவர்களுடைய உடல்களை கேரளாவுக்கு விரைந்து கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து