முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

GV பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஸ்டுடியோ கிரீன் கே. ஈ ஞானவேல் ராஜா மற்றும் திருக்குமரன் என்டர்டைமெனெட் சி.வி. குமார் ஆகியோர் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”. பத்திரிகை ஊடகத்தினர் முன்னிலையில், படத்தின் பிரமாண்ட பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இயக்குநர்கள் பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, கௌரவ், தயாரிப்பாளர் சிவா, நடிகர் ஆரி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் நிகேஷ் பேசுகையில், இது ஒரு அரசியல் படம், இந்தப்படத்தை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட ஜீவிக்கு நன்றி. சமூகத்திற்கு தேவையான படமாக இப்படம் இருக்கும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மூனாறு பகுதிகளில் விரைவில் தொடங்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து