முக்கிய செய்திகள்

டொவினோ தாமஸ் நடிக்கும் கடைசி நொடிகள்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Tovino-Thomas 2022 01 08

Source: provided

மலையாளத்தில் பாரன்ஸிக் என்ற பெயரில் வெளிவந்து பெரும் வசூலை அள்ளிக்குவித்த இப்படத்தை "கடைசி நொடிகள்" எனும் பெயரில் தமிழுக்கு ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது. விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்கம் அனஸ்கான் அகில்பால்.                          கதை பற்றி கூறிய இயக்குனர்,  வரிசையாக  பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நியமிக்கப்படுகிறார். இவர் பல வழிகளில் துப்பு துலக்கி எப்படி அந்த கொலைகாரன் கண்டு பிடிக்கப் படுகிறான் என்பதுதான கதை என்கிறார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு-அகில் ஜார்ஜ்  இசை-ஜேக்ஸ் பிஜோயி, வசனம்-ஏ.ஆர், கே. ராஜராஜா,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து