முக்கிய செய்திகள்

ஐ.சி.யூ.வில் அனுமதி: பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      சினிமா
Lata-Mangeshkar 2022 01 11

பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவலின் 3-வது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு 13 ஆயிரம் பேருக்குமேல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய்,விஷ்ணு விஷால் நடிகைகளில் த்ரிஷா, மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 92 வயதாகும் அவர், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர்களின் ஃபேவரிட்டான கமல்ஹாசனின் ‘சத்யா’ படத்தின் ‘வலையோசை’ பாடலை பாடியவர் லதா மங்கேஷ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து