முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெறுகிறது. இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி இன்று முதல் வரும் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட உற்சவ டிக்கெட் பெற்றவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!