எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று ஒப்புக்கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அலுவலக வெளிப்பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
போரீஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் கீழ் சபையில் போரீஸ் ஜான்சன் பேசினார்.
அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று முதல் முதலாக அவர் ஒப்புக் கொண்டார். அது ஒரு வேலை சம்பந்தமான நிகழ்வு என்று தான் நம்பியதாக அவர் தெரிவித்தார். இதற்காக மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


