எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த மாதம் முதல் ஒரு லட்சத்துக்கு கீழாகவே பதிவாகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இந்த திட்டத்துக்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இதுகுறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைப்பின் தடுப்பூசி திட்ட துணை தலைவர் நிக்கி கனேனி கூறியதாவது:-
இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5-ல் 4 பேர் ஏற்கனவே பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இப்போது இந்த திட்டத்தை 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு விரிவுப்படுத்தி உள்ளோம். இதன்மூலம் இந்த குளிர் காலத்தில் அவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கொரோனாவுடன் வாழ்வதற்கு நாம் கற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


