முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்குடியினருக்காக பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் ஆரோக்கியசாமிக்கு ஐரோப்பிய கவுன்சில் விருது: முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர்  எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜூவிற்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜூக்கு  ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர்  எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜூவிற்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புறத் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து