முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14-ம் தேதி நடைபெறுகிறது.

ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் தனது பலத்தை நிருபிக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அவர் கூறியதாவது.,

கோவா சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெறும். பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை ஆம் ஆத்மி பூர்த்தி செய்யும். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் வழக்கறிஞர் அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து