எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டாரத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வள்ளியூர் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் சோதனை முயற்சியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர் ப. சரவணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். இவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும்போது விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இரு, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவோர் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த உயிரிழப்புகளையும், விபத்துகளையும் தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டி வருகிறார்கள். வள்ளியூர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாட்டுக் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


