முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பெண் குழந்தைகள் தினம்: ஓ. பி.எஸ். வாழ்த்து

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைக்கப்படுவதை உறுதி செய்யும்பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் நாள் தேசிய பெண் குழந்தைகள் நல தினமாக அனுசரிக்கப்படுகிறது.  இந்த நாளில் பெண் குழந்தைகள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெண் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களது முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவோம் என இந்நாளில் நாம் அனைவரும் சூளுரைப்போம் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து