முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு மாநிலங்களில் கொடியேற்றியதை அரசியலாக்க வேண்டாம்: கவர்னர் தமிழிசை

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

இரு மாநிலங்களில் கொடியேற்றியதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என்று கவர்னர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர தினத்தின்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்-அமைச்சர்களும், குடியரசு தினவிழாவின்போது கவர்னரும் தேசியக்கொடியேற்றுவது மரபு. புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு கவர்னராக உள்ளார். இந்தநிலையில் குடியரசு தினமான நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி வந்தார். கடற்கரை சாலையில் நடந்த விழாவில் பங்கேற்று தேசியக்கொடியேற்றி வைத்தார். குடியரசு தினவிழாவில் இரு மாநிலங்களில் கொடியேற்றிய முதல் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவார்.

இந்நிலையில், குடியரசு தினத்தன்று இரு மாநிலங்களில் கொடியேற்றியதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து