Idhayam Matrimony

நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை: தமிழக அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

மேலும், சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து