Idhayam Matrimony

உக்ரைன் மீதான படையெடுப்பு: அமெரிக்க வங்கிகள், சோனி, அமேசான் நிறுவனங்களின் சேவைகளுக்கு ரஷ்யாவில் தடை

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2022      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. ரஷ்யாவுடனான வங்கி வர்த்தக சேவைகளை விசா, மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இதைத் தொடர்ந்து, மெக் டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், கோகோ-கோலா, பெப்சி, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, அல்ஷயா குரூப், கேப்சி, பிசா ஹட், பர்கர் கிங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவில் உள்ள தங்களது விற்பனை மையங்களை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷ்யாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. போரை நிறுத்தி உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவுக்கு சோனி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. மேலும் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் மற்றும் ஜேபிமோர்க சேஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தியது அமேசான் நிறுவனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து