எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் இன்று அழகர் மலை சென்றடைகிறார். அவரை மனமுருக பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. கடந்த 13-ம் தேதி மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடானார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகருக்கு 15-ம் தேதி அதிகாலையில் மூன்று மாவடியில் பக்தர்கள் வரவேற்று எதிர்சேவை அளித்தனர்.
தொடர்ந்து அன்றைய தினம் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்தடைந்த கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்தடைந்ததை 16-ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோரிப்பாளையம் வழியாக தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை தரிசித்தனர்.
அதை தொடர்ந்து 17-ம் தேதி ஷேச, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெற்றது. 18-ம் தேதி (திங்கட்கிழமை) மோகன வதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று 19-ம் தேதி பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று 20-ம் தேதி (புதன்கிழமை) அப்பன் திருப்பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் கள்ளழகர். தொடர்ந்து அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பிற்பகல் கள்ளழகர் அழகர்மலை சென்றடைகிறார். நாளை (21-ம் தேதி) கள்ளழகருக்கு உற்சவ சாந்தி நடக்கிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


