முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் 5-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      ஆன்மிகம்
thirupathy 2021 06 15

Source: provided

திருப்பதி : வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமை தாங்கி பேசினார். திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ. 3.60 கோடியில் தங்க சிம்மாசனம் தயார் செய்யப்படும். 

அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகள் வழியாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும். மும்பையில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டுவதற்காக மகராஷ்டிர அரசு 10 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. 

அரசு வழங்கிய நிலத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ஆகும். அங்கு ரேமண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கவுதம் சிங்கானியா கோவில் கட்ட முன்வந்துள்ளார்.  திருப்பதியில் ரூ. 20 கோடியில் பத்மாவதி மருத்துவக் கல்லூரி கட்டப்படும். சீனிவாச சேது பாலத்தின் முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளது. அந்த பாலத்தை 5-ம் தேதி முதல்வர் ஜெகன் மோகன் திறந்து வைக்கிறார். இதையடுத்து 2-வது கட்டமாக பாலம் கட்டும் பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணி வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.  நிபுணர்களின் பரிந்துரைப்படி திருப்பதி மலைப்பாதையை பலப்படுத்த 2-வது கட்டமாக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதிகளை சீரமைக்க ரூ. 19 கோடி நிதி ஒதுக்கப்படும். திருமலை பாலாஜி நகரில் 2.86 ஏக்கரில் மின்சார பஸ் நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து