முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் ஏலியனா நாசா விஞ்ஞானிகள் குழப்பம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      அறிவியல்
news

Source: provided

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் இருந்த அமைப்பைக் கண்டு வேற்று கிரகவாசிகளாக இருக்குமோ என நாசா விஞ்ஞானிகளே குழம்பிவிட்டனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது.

பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்தது.இதுவரை 25 முறை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த ஹெலிகாப்டர் 26ஆவது முறையாகச் சமீபத்தில் பயணித்தது.

அப்போது அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முக்கோண வடிவில் அமைப்பு ஒன்றை படம்பிடித்து அனுப்பியது. வெள்ளை நிறத்தில் கூம்பு போன்ற வடிவில் இருந்த அந்த அமைப்பைக் கண்டு வேற்று கிரகவாசிகளாக இருக்குமோ என விஞ்ஞானிகளே முதலில் குழம்பிவிட்டனர்.

ஆனால் தீவிர ஆய்வுக்குப் பின்னரே அது இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உதவிய பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் பாகங்கள் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்இதன் பிறகே விஞ்ஞானிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 2 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து