தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் அவசரநிலை அமலில் இருந்தும் அங்கு கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அவரது குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. அவரது குடும்பம் நாட்டை விட்டு தப்பி செல்ல முயலும் நிலையில் மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது.
இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும், மக்கள் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர் போராட்டக்காரர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கையில் போராட்டம் நடத்த வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிபர் மாளிகைக்கு எதிரே முகாமிட்டு போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது கம்புகளை கொண்டு ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர்.
இதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். மேலும் இதர கட்டமைப்புகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பரஸ்பரம் மோதிக் கொண்ட இரு தரப்பையும் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் விரட்டி அடித்தனர்.
கொழும்புவின் புறநகர் பகுதியான நிட்டம்புவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர் அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்றார். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இதுமட்டுமின்றி மகிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளபோதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். அமைதியாகப் போராடிய மக்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுக்க அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருந்தாலும் தொடர்ந்து கலவரம் நடக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும், ராஜபக்சே குடும்பம் ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மக்கள் கோபத்தை தணிக்க மகிந்தா ராஜபக்சே ராஜினாமா உதவும் என ராஜபக்சே குடும்பம் எண்ணியது. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜினாமா செய்தால் மக்களின் கோபம் குறைந்துவிடும், கட்சியின் அதிகாரமும் காப்பாற்றப்படும்' என்று எண்ணினர்.
ஆனால் மக்கள் போராட்டம் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியினரே இரண்டு அணிகளாகப் பிரிந்து பிரதமர் பக்கமும் அதிபர் பக்கமும் சென்றுள்ளனர். இதனால் பிரச்சினை தீரவில்லை. இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 9 min ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 6 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 2 days ago |
-
விரைவில் திரைக்கு வரும் பேய காணோம் படம்
04 Jul 2022குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தேனி பாரத் R.
-
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் : தே.மு.தி.க. தலைமை அறிக்கை
04 Jul 2022சென்னை : விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தே.மு.தி.க. தலைமை தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
04 Jul 2022பர்மிங்காம் : இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
-
அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
04 Jul 2022வாஷிங்டன் : நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
04 Jul 2022கோபன்ஹேகன் : டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
மாய கங்கா பாடலை வெளியிட்ட ஜி.கே. ரெட்டி
04 Jul 2022என்.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கும் படம் பனாரஸ். இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
-
இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம்: இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் : பெட்னா அமைப்பின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : இறை நம்பிக்கையில் ஒரு நாளும் தலையிட மாட்டோம் என்றும், இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.
-
ராக்கெட்ரி விமர்சனம்
04 Jul 2022மாதவன் முதன் முறையாக இயக்கி நடித்துள்ள படம் ராக்கெட்ரி. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
-
ஆப்கனில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
04 Jul 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் 2023-க்கான உக்ரைன் மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
04 Jul 2022லண்டன் : உக்ரைன் மீட்பு மாநாடு 2023 இங்கிலாந்தில் நடத்தப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு
04 Jul 2022மாஸ்கோ : உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
-
யானை விமர்சனம்
04 Jul 2022ஹரி இயக்கத்தில் வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் யானை.
-
5,689 மெகாவாட் உற்பத்தி: தமிழகத்தில் 2-வது முறை உச்சம் தொட்ட காற்றாலை மின் உற்பத்தி
04 Jul 2022சென்னை : தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக 5689 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
-
கனல் இசை வெளியீட்டு விழா
04 Jul 2022த நைட்டிங்கேல் புரொடக்சன் தயாரிப்பில் சமய முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனல்’.
-
ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு: தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Jul 2022சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.
-
கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை செய்ய கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி
04 Jul 2022மதுரை : கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதை தடை செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ. 1,25,244 கோடியில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து - 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
04 Jul 2022சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்களின் முதல் முகவரி, தமிழ்நாடு என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய்
-
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக விசைதறிகள் வேலை நிறுத்தம் : ரூ.12 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு
04 Jul 2022ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.
-
பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் பலி
04 Jul 2022இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர்.
-
செஸ் ஒலிம்பியாட் தரவரிசை: 2,696 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இந்திய அணி
04 Jul 2022சென்னை : செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
-
டி பிளாக் விமர்சனம்
04 Jul 2022யூடியூப் புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள் நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘டி பிளாக்’.
-
ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்ட கிப்ட் பஸ்ட் லுக்
04 Jul 2022பி.பி. சினிமாஸின் முதல் தயாரிப்பான கிஃப்ட் படத்தினை இயக்குனர் பா.பாண்டியண் இயக்கி வருகிறார்.
-
நீலகிரி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
04 Jul 2022சென்னை : தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தவறி விழுந்து எலும்பு முறிவு: மருத்துவமனையில் லல்லு பிரசாத் அனுமதி
04 Jul 2022பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியே : சென்னை, ஜகோர்ட் உத்தரவு
04 Jul 2022சென்னை : மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.