முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது வடகொரியா

வியாழக்கிழமை, 12 மே 2022      உலகம்
koriea-corono-12-5-22

Source: provided

பியாங்கியாங் : வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.  தற்போது கொரோனா வைரஸ் 225-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  

இந்நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அந்த நபர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.  இதனை தொடர்ந்து கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தேசிய அளவில் அவசரகால நிலையை பிறப்பித்து உள்ளார்.

  இதே போன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  வடகொரியாவில் தொற்று இல்லை என இதுவரை தகவல் வெளிவந்த நிலையில், ஒருவருக்கு பாதிப்பு உறுதியான சூழலில் நாடு முழுவதும் அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!