முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்கிறது?

வியாழக்கிழமை, 12 மே 2022      இந்தியா
Central-government 2021 07

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது. 

2021-ம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2022 மார்ச்சில் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ. 9,544 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.63 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவர் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மார்ச்சில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.95 சதவீதமாக அதிகரித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்தப்பலாம் என கருதப்படுகிறது. அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டால், 56,900 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 21,622 ரூபாயாக உயரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து