முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தியாவசிய பட்டியலில் கட்டுமான பொருள்கள்: இ.பி.எஸ். கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
EPS-2022-04-14

Source: provided

சேலம் : கட்டுமான பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலுக்கு கொண்டு வந்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

சேலம் மெய்யனூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிருக்கான அம்மா இலவச தையல் பயிற்சி மையத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தையல் பயிற்சி மையத்தில் 10 நவீன தையல் இயந்திரங்கள் கொண்டு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய பெண்கள், சுய தொழில் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் இதுபோன்ற இலவச தையல் பயிற்சி மையம் அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. 70 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு அரசு துரோகம் அளித்துள்ளனர். மக்களுக்கு வேதனை அளிக்கிறது.  காவிரி டெல்டா பகுதியில் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது என்பதற்காக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என கடந்த ஆட்சியில் அறிவித்தோம். இந்த சட்டத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் கொண்டுவர முடியாது.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. எட்டு வழிச் சாலையால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பது எனது நிலைப்பாடு. நானும் விவசாயி தான். விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கட்டுமான பொருள்களின் விலையை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியல் கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.   சிமென்ட், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டுபவர்கள் துன்பத்தில் உள்ளனர்.  

மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட துறைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் போதிய நிதி ஆதாரத்தை மேம்படுத்தாமல் மின் கட்டணத்தையும், பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்த உள்ளது. நிர்வாகத் திறமையோடு செயல்பட்டு நஷ்டத்தை சரிப்படுத்த வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து