முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 35.82 கோடியில் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகள் மற்றும் அலுவலக கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      தமிழகம்
CM-2 2022 05 13

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று , கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில்  35.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் ரூபாய் 25 கோடி செலவில் மொத்தம் 12000 மெ.டன் கொள்ளளவு கொண்ட  6 சேமிப்பு கிடங்குகள்,  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்,  ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் கிராமத்தில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்,  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம்,  நாதேகவுண்டம்பாளையம் கிராமத்தில் 4 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 3000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், 

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், விளமல் கிராமத்தில் உள்ள திருவாரூர் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூபாய் 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு அலுவலகக் கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை என மொத்தம் ரூபாய் 35.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டிடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்  துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் பிரபாகர்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து