எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் 1,250 கோவில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த சட்டமன்ற 2021-22 அறிவிப்பில் கிராமப்புற கோவில் திருப்பணித் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1,250 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு சார்நிலை அலுவலர்களிடம் இருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி 1,250 கோவில்கள் இறுதி செய்யப்பட்டு திருக்கோவில் பெயர் விவரப்பட்டியல் இத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 1
,250 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தி அதனை தொடர்ந்து மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று பொதுநலநிதியின் மூலம் மண்டல இணை ஆணையர் நிலையில் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும், விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


