முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புடினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது புதிய தடை விதித்த இங்கிலாந்து

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
Putin 2022-05-14

Source: provided

லண்டன் : ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கும் கூடுதலாக தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன.  போரை நிறுத்த பல நாடுகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இதுதவிர, புடினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து வருகிறது.  இதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது. 

இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் கூறும்போது, புடினின் குடும்பம், பால்யபருவ நண்பர்கள் மற்றும் புடின் அரசாட்சியில் பலன் பெற்ற நபர்கள், பதிலுக்கு புடினின் வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.  புடினுக்கு உதவி செய்யும் அனைவர் மீதும் இங்கிலாந்து தொடர்ந்து தடைகளை விதிக்கும் எனவும் டிரஸ் கூறியுள்ளார்.

இதன்படி, புடினின் ரகசிய காதலி என கூறப்படும் ஓய்வு பெற்ற ஒலிம்பிக் வீராங்கனையான அலினாவுக்கு எதிராக இந்த தடை விதிக்கப்படுகிறது.  இதே போன்று, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் புடினின் முன்னாள் மனைவியான லுட்மிலாவுக்கு எதிராகவும் தடை விதிக்கப்படுகிறது.  புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புடின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து