முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை : சென்னை போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Shankar-Jiwal 2022-05-14

Source: provided

சென்னை : மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை, ரூட் தல பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஒரு தகவல் வந்து கொண்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி, புதுக் கல்லூரி மற்றும் சைதாப்பேட்டையில் என நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களிலும் தவறு, கல்லூரி மாணவர்கள் மேல்தான் உள்ளது.

அரசுப் பேருந்து நடத்துநர்கள், மாணவர்களிடம் தாளம் போட வேண்டாம், ஆட வேண்டாம் என்று மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று அறிவுறுத்துகின்றனர். அதைக் கேட்டு மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அதனை மீறுவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது.  இதற்கு முன்புவரை, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடும் என்பதால், மென்மையாக கையாண்டோம். இனிமேல் அப்படியிருக்காது. இதுவொரு எச்சரிக்கை போன்றதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!