முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 பயங்கரவாதிகள் விடுதலை செய்த பாகிஸ்தான் அரசு

புதன்கிழமை, 18 மே 2022      உலகம்
Pakistan 2022 05 18

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அரசு 30 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை  விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது எனவும்  முக்கிய பயங்கரவாதிகளாக கருதப்படுபவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, முன்னாள் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் வைத்து, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் (டி.டி.பி) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், பெரும்பாலும் டி.டி.பி இயக்கம் நடத்திய தாக்குதல்களில் 120 பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் அதிகாரிகள்   கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து