Idhayam Matrimony

பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி

வியாழக்கிழமை, 8 மே 2025      தமிழகம்      அரசியல்
Chennai-high-court2

சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக்கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "2013-ம் ஆண்டு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் பங்கேற்க சென்றவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதி கலவரம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 4 பேர் பலியாகினர்.இந்த நிகழ்வுக்கு பின், சித்திரை முழு நிலவு கூட்டத்தில் அரசு அனுமதி அளிப்பதில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு கூட்டம் நடத்துவது, எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு ஏற்கனவே அனுமதி தரப்பட்டுள்ளதால் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து