முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த போர்  நிறுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இரண்டு நாடுகளும் பேசித் தீர்வு காண வேண்டும்.  காஷ்மீரிலுள்ள பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. அது மேலும் விரிவடையக்கூடாது; போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இரண்டு நாடுகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வந்தன.

போரை நிறுத்துவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களோடும், பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடமும் பேசினார். அமெரிக்கா மேற்கொண்ட சமரசத்தின் விளைவாகவே இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் சமரசமோ அல்லது இரு நாடுகளின் சுயமான முடிவோ எப்படியாயினும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும். அதனால் பொதுமக்கள் ஒருபோதும் பயனடைவதில்லை. எனவே, மீண்டும் போர் வெடித்துவிடாமல் பார்த்துக்கொள்வதோடு, பயங்கரவாதத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கு உலக அளவில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றித் தீர்வுகாண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து