முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

திங்கட்கிழமை, 5 மே 2025      வர்த்தகம்
gold 2024-01-04

சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. 

இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கம் பெரிய மாற்றுப் பொருளாக திகழ்கிறது. இதனால், அடுத்த ஆண்டு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொட்டு விடும் என நகை வியாபாரிகள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,200-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து