முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

31 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை: உறவினர்கள் ஆனந்த கண்ணீர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Peraivalan 2022 05 18

Source: provided

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல்அறிந்த அவரது உறவினர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டு முன்பு குவிந்தனர். அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துக் கொண்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பேரறிவாளனின் சகோதரிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர்.

31 ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வந்ததால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தந்தை குயில்தாசன் தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் மனிதநேய மிக்க அனைவருக்கும் நன்றி. தனது மகனின் 31 ஆண்டு சிறைவாசம் நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அவர்களே ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். நீதி நியாயம் வென்றது என்று அவர்கள் முழக்கம் செய்தனர்.  அதைத் தொடர்ந்து பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!