முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து லக்னோவின் வெற்றிக்கு வித்திட்ட எவின் லூயிஸ்

வியாழக்கிழமை, 19 மே 2022      விளையாட்டு
19 Ram 51

Source: provided

மும்பை:லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது கடைசி ஓவரில் எவின் லூயிஸ் (Lewis) லாவகமாக பிடித்த ஒற்றைக் கை கேட்ச்.

லக்னோ வெற்றி...

நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்து விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர்.

21 ரன்கள் தேவை...

கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்த நிலையில் கடைசி கட்டத்தில் நம்பிக்கை கொடுத்தனர் ரிங்கு சிங் மற்றும் சுனில் நரைன். 19 பந்துகளில் 58 ரன்களை இருவரும் சேர்த்தனர். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட 4, 6, 6, 2 என முதல் நான்கு பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார் ரிங்கு சிங். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அவுட்சைட் ஆஃப் திசையில் மிதமான வேகத்தில் வீசி இருந்தார் ஸ்டாய்னிஸ். 

ரிங்கு அடித்த பந்தை...

அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்றிருப்பார் ரிங்கு. அதனை டீப் பேக்வேர்டு பாயிண்ட்டில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த எவின் லூயிஸ், ஓட்டம் எடுத்து இடது பக்கமாக பாய்ந்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து மாயம் செய்திருப்பார். மைதானமே சில நொடிகள் அந்த கேட்ச்சை அவர் பிடித்ததாக நம்பவில்லை. அப்படி ஒரு அசாத்தியமான கேட்ச் அது. 

வெற்றியை பறித்தது...

அந்த ஒரு கேட்ச் கொல்கத்தா பக்கமிருந்த வெற்றியை லக்னோ பறித்து வர உதவியது. கடைசி பந்தில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட விக்கெட்டை இழந்திருப்பார் உமேஷ் யாதவ். இந்த தோல்வியினால் தொடரை விட்டு வெளியேறி உள்ளது கொல்கத்தா. ஐபிஎல் களத்தில் பிடிக்கப்பட்ட சிறந்த கேட்ச்களின் வரிசையில் இந்த கேட்ச் நிச்சயம் இருக்கும் என தெரிகிறது.

2-வது அணியாக தகுதி...

இந்த போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ அணி நடப்பு சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள இரண்டாவது அணியாக இணைந்துள்ளது. அந்த அணி ஐபிஎல் களத்தில் விளையாடி வரும் முதல் சீசனிலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!