முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      விளையாட்டு
PV-Sindhu 2022-05-20

கால்இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார். 

அரையிறுதிக்கு...

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற, கால்இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்த்து மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-15, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் யமகுச்சியை வீழ்த்தி வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில்...

முன்னதாக உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 46-வது இடத்தில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சிம் யு ஜின்னை காலிறுதியில் எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 37 நிமிடங்களில் முடிவடைந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!