முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உதகையில் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சனிக்கிழமை, 21 மே 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

உதகை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினத்தையொட்டி, உதகையில் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து