முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதி பி.வி.சிந்து தோல்வி

சனிக்கிழமை, 21 மே 2022      விளையாட்டு
PV-Sindhu 2022-05-20

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்றது.

இந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து , சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர் பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய்-யிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தோனேசியாவில் இந்திய அணி 

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றது. பெங்களூரு, 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 24-ந் தேதி ஜப்பானையும், 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 26-ந் தேதி இந்தோனேசியாவையும் சந்திக்கிறது. 

இந்த போட்டிக்கான பிரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய ஹாக்கி அணி பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா அளித்த பேட்டியில், 'ஆசிய கோப்பை போட்டி மதிப்புமிக்கதாகும். இந்த போட்டிக்கான நமது அணியினர் நன்கு தயாராகி இருப்பதுடன் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். பெங்களூருவில் நடந்த எங்களது பயிற்சி முகாம் கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்த விரும்புகிறோம் என்றார்.

இளம் பவுளரை பாராட்டிய சென்னை அணி கேப்டன்...!

“சென்னை வீரர்கள் ஆட்டம் எப்படி முடிந்தாலும், அவர்கள் அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். அதில் மிகப் பெரிய உதாரணங்களில் ஒன்று முகேஷ். அவர் எல்லா கேம்களிலும் விளையாடினார், ஆனால் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அவர் எப்படி முன்னேறினார் என்று பார்ப்பது சுவாரஸ்யமானது. அவர் டெத் ஓவர்களின் போது சிறப்பாக பந்து வீச முடியும் என்று நிரூபித்துள்ளார்.

இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வீரர்களிடமிருந்து விரும்புகிறோம். அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றவுடன், அடுத்த ஆண்டு முதல் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டாம். இளைஞர்களிடமிருந்து அதுதான் தேவை, அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எங்கள் மலிங்கா (மதீஷா பத்திரனா), அவர் உண்மையிலேயே நல்லவர். அவரைத் தேர்ந்தெடுப்பது கடினம், அடுத்த ஆண்டு அவர் எங்களுக்கு பெரிய அளவில் பங்களிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார் டோனி.

மீண்டும் சர்ச்சை வர்ணனை: சுனில் கவாஸ்கருக்கு சிக்கல்

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரோன் ஹெட்மயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 12 ஆட்டங்களில் 297 ரன்கள் சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி நிவானிக்கு குழந்தை பிறந்ததால் ஹெட்மயர் தாயகம் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். 

தற்போது மீண்டும் விளையாடி வரும் அவரை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவரை வர்ணனை செய்த விதம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''ஹெட்மையரின் மனைவிக்கு இப்போது தான் டெலிவரி ஆனது. அவர் மனைவி டெலிவரி செய்துவிட்டார்; ஹெட்மையர் பேட்டிங்கில் டெலிவரி செய்வாரா? என்று பார்க்கலாம்'' என்று கவாஸ்கர் கமெண்டரி செய்தார். சுனில் கவாஸ்கரின் இந்த கமெண்டரிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. 

இதில் நியூசிலாந்து-கவுண்டி அணியான சஸ்செக்ஸ் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் ஹோவ் நகரில் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹென்றி நிகோல்ஸ், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜூர்ஜென்சென் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து