முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2022      விளையாட்டு
Bumra 2022-05-22

Source: provided

மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதே போல் தென் ஆப்பிரிக்க தொடர் ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டு இருந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டி ஜூலை 1-5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டாக பெரிய அளவில் ரன் குவிக்க திணறிவரும் அவர் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு : ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் ), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர் ), ஆர்.ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி. , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!