முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 23 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 01 10

புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., தூத்துக்குடியில் மட்டும் உப்பு உற்பத்தி தொழிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பில் அயோடின் கலப்பு அவசியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது. அயோடின் நுண்ணூட்ட சத்து கிடைக்காததால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்களிடம் அயோடின் கலப்பு அவசியம் என்று அறிவுறுத்தி உள்ளோம். 

செறிவூட்டப்படாத உப்பு மனித உபயோகத்துக்கு ஏற்றது அல்ல என்று அச்சிட்டு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் உள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உப்பின் தரம் மழைக்காலங்களில் தற்போது நிர்ணயித்து உள்ள அளவுக்கு தரமான உப்பை கொடுக்க முடியாது. இதனால் உப்பின் தரத்தை 96 சதவீதத்தில் இருந்து 92 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். 

லேபிள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உள்ளார்கள். வழக்கின் தன்மைக்கு ஏற்ப விரைந்து முடிக்கவும், சிறிய வழக்குகளில் அவசியமற்றதாக தெரிந்தால் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு பாக்கெட்டுகளில் முழுமையான முகவரி இல்லாத நிலை குறித்து மக்கள் நேரடியாக 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். 

புதிய வகை தொற்று தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளார். தமிழகத்தில் எங்காவது இருந்தால், உடனடியாக அங்கே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு கூடத்தில் சோதனை செய்யப்பட்டு, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை.

 கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக இறப்பு ஏதும் இல்லை. காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நிதிநிலை அறிக்கையில் அறிவித்து உள்ளோம். மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 442 நர்சுகள், 2 ஆயிரத்து 247 சுகாதார பணியாளர்களுக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!