எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.
கடந்த தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்தபடி 4 ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது. தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.
முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை . அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால் வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.
தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட அரசாணையை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


