முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், சேலத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். சேலம் மாவட்டம் சாதாரண மாவட்டம் அல்ல, வீரபாண்டியார் மாவட்டம். இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்றுசேர்க்கும் ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி இருக்கும். திமுக ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசு என்பதை உணர வேண்டும்.

திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும். திமுக கொடுத்த வாக்குகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் என மக்கள் மத்தியில் உறுதி அளிக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கண்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளனர். 

மாநில வரியை மத்திய அரசு சுரண்டிவிட்டது. இல்லாததை கட்டவிழ்த்துவிட்டு பார்க்கும் பலரால் இருப்பதை கண் திறந்து பார்க்க முடியவில்லை. எத்தனை விஷத்தன்மை வாய்ந்த பிரசாரங்களை செய்தாலும் திமுகவை ஒருபோதும் மக்கள் மனதிலிருந்து வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து