முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Murugan 2022 05 24

Source: provided

வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், கடந்த 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியது தொடர்பாக சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு வேலூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்த வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. அரசு தரப்பிலிருந்து போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து