முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை

சனிக்கிழமை, 24 ஜனவரி 2026      தமிழகம்
Drone 2023 06 12

சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை (திங்கட்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடக்கும் பிரமாண்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைப்பார். இதையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நடக்கும் உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டில் இருந்து நிகழ்ச்சிக்கு வரும் சாலைகள் உள்ள பகுதி, இதேபோல, கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிக்கு வரும் சாலையில் உள்ள பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள வான்வெளியைச் சுற்றி அல்லது வேறு வழியில் லேசர் கற்றை விளக்குகள், சூடான காற்று பலூன்கள் இணைக்கப்பட்ட பலூன் மற்றும் ஒளி உமிழும் பொருட்கள், பறக்கும் கிளைடர்கள் மற்றும் பிற பறக்கும் பொருட்களை வெளியிடுவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முதல் மார்ச் 23-ம்  தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து