முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 10-ம் பொதுத்தேர்வு 6-ந் தேதியும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதியும் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். உடல்நிலை பாதிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகும். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு கணித தேர்வை 45 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!